மாசடைந்து வரும் குட்டை; வீணாகும் மக்கள் வரிப்பணம்

பல்லடம்,; பல்லடம் ---- மாணிக்காபுரம் ரோட்டில், நகராட்சிக்கு உட்பட்ட, மாணிக்காபுரம் குட்டை உள்ளது. குப்பைகள், கழிவுகளுடன் புதர்கள் மண்டி கிடந்த இந்த குட்டை, தமிழக அரசின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், முழுமையாக துார்வாரப்பட்டு, பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வகையில், பூங்காவாக பராமரிக்கப்பட்டது.

பல லட்சம் ரூபாய் மதிப்பில் துார்வாரப்பட்டு, பூங்காவாக பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், குட்டையின் அருகே, கோழி, இறைச்சி மற்றும் மீன் கழிவுகள், குப்பைகள் உள்ளிட்டவை கொட்டப்படுகின்றன. இதனால், பல லட்சம் மதிப்பில் பராமரிக்கப்பட்டு வரும் இக்குட்டையின் சூழல் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறது.

பொதுமக்களும், இங்கு நடைப்பயிற்சி மேற்கொள்ள முகம் சுளிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, குட்டையின் அருகே குப்பைகள், கழிவுகள் கொட்டுவதை தடுக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விதிமுறை மீறி இங்கு குப்பைகள் கொட்டுபவர்களை கண்காணித்து அபராதம் விதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement