மாணவரின் திறனை மேம்படுத்துவதே மணி பப்ளிக் அகாடமியின் நோக்கம்
திருப்பூர்; 'மாணவ, மாணவியர் மத்தியில் புதைந்துள்ள திறமைகளை மேம்படுத்துவதே நோக்கம்,' என திருப்பூர் தில்லைநகர், மணி பப்ளிக் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது:
காற்றோட்டமான வகுப்பறை, இயற்கை சூழல் நிறைந்த மைதானம் என, மாணவ, மாணவியர் விரும்பும் கட்டமைப்புடன் பளளி அமைந்துள்ளது. எங்களின் நோக்கம், மதிப்பெண் அடிப்படையிலானது அல்ல; மாறாக, குழந்தைகளின் வாசிப்புத்திறன், கற்றல் திறனை மேம்படுத்தி, அவர்களிடம் உள்ள தனித்திறமையை வெளிக்கொணரும் கல்வி போதிப்பு முறைக்கு தான் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
குழந்தைகளின் மனப்பாட சக்தியை மேம்படுத்தும் விதமாக திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, பாரதியார் கவிதை ஒப்புவித்தல், பேச்சுப் போட்டி என, பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. குழந்தைகளின் தனித்திறமையை ஊக்குவிக்கும் வகையில் உணவுத்திருவிழா, அறிவியல் கண்காட்சி மற்றும் பயனற்ற பொருட்களை கொண்டு கலைநயமிக்க கைவினைப் பொருட்களை உருவாக்குவது போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. விளையாட்டு போட்டிகளில், மாணவ, மாணவியர் தங்களின் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். குழந்தைகளின் திறமையை கண்டறிந்து, ஊக்குவிக்கும் வகையில், அடுத்த கல்வியாண்டில் பல்வேறு கல்வி தொடர்புடைய நிகழ்ச்சிகளுக்கு திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.