குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில்தற்காலிக பணியிடம் அறிவிப்பு


குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில்தற்காலிக பணியிடம் அறிவிப்பு


நாமக்கல் :நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கை:தொகுப்பூதிய பணிக்கு விண்ணப்பிப்பவர்கள், 1.1.25ம் தேதி, 42 வயது உடையவர்களாகவும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவராகவும் இருப்பது அவசியம். பாதுகாப்பு அலுவலர், 2 பணியிடங்களுக்கு மாதம் தொகுப்பூதியமாக, 27,804 ரூபாய் வழங்கப்படும்.
சமூகப்பணி, சமூகவியல், குழந்தைகள் வளர்ச்சி, மனித உரிமைகள் பொது நிர்வாகம், உளவியல், சட்டம், பொது சுகாதாரம் இவற்றில், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மூலம் வழங்கப்பட்ட முதுகலை பட்டம் அல்லது இளங்கலை பட்டத்துடன், 2 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும், கம்ப்யூட்டர் அறிவு உள்ளவராக இருத்தல் வேண்டும்.
ஒரு கணக்காளர் பணியிடத்திற்கு தொகுப்பூதியமாக, 18,536 மாத சம்பளம் வழங்கப்படும். வணிகவியல், கணிதவியலில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தில் இளங்கலை பட்டம், குறைந்தபட்சம் ஓராண்டு பணி முன் அனுபவம், கம்ப்யூட்டர் அறிவு, டேலி தெரிந்திருக்க வேண்டும்.
சமூக பணியாளர் பணியிடங்கள், 2க்கு மாதந்தோறும் தொகுப்பூதியமாக, 18,536 ரூபாய் வழங்கப்படும். சமூகப்பணி, சமூகவியல், சமூக அறிவியல் பாடங்களில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தில் இளங்கலை பட்டம், பணி முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கம்ப்யூட்டர் அறிவு வேண்டும். தகுதியான நபர்களிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 25ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, அறை எண், 320, மூன்றாவது தளம், மாவட்ட ஆட்சியர் வளாகம், நாமக்கல், 637 003 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement