தேர்வை பயமின்றி எழுத மாணவிகளுக்கு புத்தகம்

புதுச்சேரி: பிளஸ் 2 மாணவிகளுக்கு, ராமலிங்கம் எம்.எல்.ஏ., புத்தகம் வழங்கி நம்பிக்கை ஏற்படுத்தினார்.

ராஜ்பவன் தொகுதியில் உள்ள சுசிலா பாய் பெண்கள் மேல்நிலை பள்ளியில், பிளஸ் 2 பயிலும் மாணவிகளுக்கு, பயமின்றி பொதுத் தேர்வை எதிர்கொள்ள விதமாக, பிரதமர் மோடி எழுதிய பரீட்சைக்கு பயமேன் என்ற புத்தகத்தை, ராமலிங்கம் எம்.எல்.ஏ., வழங்கினார்.

அதனை தொடர்ந்து, தேர்வில் அதிக மதிப்பெண்களை எடுக்க வேண்டும், பயமின்றி தேர்வை எழுத வேண்டும் என்று, நம்பிக்கையளித்து பேசி, விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

Advertisement