கல்வி விருது வழங்கும் விழா

புதுச்சேரி: புதுச்சேரி நகர செங்குந்தர் இளைஞர் நல சங்கத்தின் 29ம் ஆண்டு கல்வி விருது வழங்கும் விழா ஹோட்டல் கிரீன் பேலஸில் நடந்தது.
சங்கத்தின் தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். புதுச்சேரி செங்குந்தர் மரபினார் நல சங்கத்தின் தலைவர் முருகையன், நகர கவுரவத்தலைவர் சீனுவாசன், முன்னாள் தலைவர் முரளிதரன் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் சபாநாயகரும், சங்கத்தின் தலைவருமான சிவக்கொழுந்து, மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் ராணி ராஜன்பாபு ஆகியோருக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, அமைச்சர் லட்சுமி நாராயணன் பரிசு, சான்றிதழ் வழங்கினார். ராமானுஜர் இன்டலக்சுவல் சர்வீஸின் நிறுவனர் தேவிப்பிரியா, வெளிநாடுகளில் மேல்படிப்புக்கான வாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு குறித்து பேசினார்.
கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ராமலிங்கம் எம்.எல்.ஏ., பரிசுகள் வழங்கினார். பொதுச் செயலாளர் கோபிநாத் ஆண்டறிக்கை வாசித்தார். துணைத் தலைவர் காமராசு தொகுத்து வழங்கினார்.
செங்குந்த மகாஜன சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜாக்கண்ணு, செங்குந்தர் மரபினார் நல சங்கத்தின் பொதுச்செயலாளர் கண்ணன், துணைத் தலைவர் கிருஷ்ணசாமி, பொருளாளர் சங்கரநாராயணன், இணை செயலாளர் பாலசுப்ரமணியன் ஸ்ரீகாந்த் வாழ்த்தி பேசினர்.
பொருளாளர் ராஜேஷ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை துணைத் தலைவர்கள் காமராஜ், பாலசுப்ரமணியம், ஜெயராம் சக்கரவர்த்தி செய்திருந்தனர்.