சுகாதார ஆய்வாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


சுகாதார ஆய்வாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


நாமக்கல்:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட சுகாதார ஆய்வாளர்கள் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்க மாவட்ட கிளை சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, சுகாதார அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பிரபு தலைமை வகித்தார். இதில், காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் நிலை-2 பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வரும் ஆய்வாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். 5,000 மக்கள் தொகைக்கு ஒரு சுகாதார ஆய்வாளர் என்பதை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மாவட்ட செயலாளர் கார்த்தீஸ், பொருளாளர் செல்வகுமார், மாநில தலைவர் மணிவண்ணன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் மணிமாறன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement