மாணவியிடம் ஆபாச பேச்சு ஆசிரியர் போக்சோவில் கைது
நாமக்கல்:மாணவியிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியரை, நாமக்கல் போலீசார் நேற்று போக்சோவில் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், பொட்டிரெட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வகுமார், 53; பெருமாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர்.
கடந்த 10ம் தேதி ஐந்தாம் வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த போது, மாணவி ஒருவர் சந்தேகம் கேட்டார். அப்போது உரிய பதிலை அளிக்காமல், பாலியல் ரீதியாக பேசியுள்ளார். மாணவி அவரது பெற்றோரிடம் தெரிவித்தார்.
அதிர்ச்சியடைந்த அவர்கள், தலைமையாசிரியர், எருமப்பட்டி வட்டாரக் கல்வி அலுவலரிடம் புகார் தெரிவித்தனர். நடவடிக்கை எடுக்கவில்லை.
நேற்று பெற்றோர் அளித்த புகாரின்படி, நாமக்கல் மகளிர் போலீசார் செல்வகுமாரை போக்சோவில் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement