ஆந்திராவில் பறவை காய்ச்சல் மத்திய குழு ஆய்வு

அமராவதி:பறவைக்காய்ச்சல் பாதிப்பால் லட்சக்கணக்கான கோழிகள் பலியாகியுள்ளதை தொடர்ந்து, மத்திய குழுக்கள் ஆந்திராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஆந்திராவில் எலுரு, கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி ஆகிய மூன்று மாவட்டங்களில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த காய்ச்சலுக்கு கடந்த 45 நாட்களில், 5.4 லட்சம் கோழிகள் பலியாகியுள்ளன. இதுகுறித்து மாநில கால்நடை நலத்துறை அமைச்சர் அச்சன் நாயுடு கூறியதாவது:

பறவைக்காய்ச்சல் பாதிப்பு குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய அரசு செயலர் மற்றும் மத்திய பிரதேசத்தின் போபாலில் உள்ள மூத்த விஞ்ஞானிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து பறவைக்காய்ச்சல் பாதிப்பை மதிப்பீடு செய்வதற்காக மத்திய அரசின் குழுக்கள் ஆந்திராவுக்கு வரவுள்ளன. அத்துடன், மத்திய அரசின் மூத்த அதிகாரியும் இன்று ஆந்திரா வருகிறார்.

இது தவிர கட்டுப்பாடுகளை தீவிரமாக செயல்படுத்துவதை உறுதி செய்ய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பறவை காய்ச்சல் தொடர்பான, புரளி களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement