திண்டுக்கல்லில் மூதாட்டி கொலை

திண்டுக்கல்:திண்டுக்கல் பிஸ்மிநகரை சேர்ந்த டீ மாஸ்டர் ஜெய்லாபுதீன் 72. டீ கடையில் வேலை செய்கிறார். இவருக்கும் மனைவி முகமதாபீவிக்கும் 63 தகராறு இருந்தது. நேற்று முன்தினம் இரவு ஜெய்லாபுதீன் மதுபோதையில் வந்துள்ளார்.

நேற்று அதிகாலை 5:00 மணிக்கு டீ குடிப்பதற்காக அருகில் உள்ள டீக்கடைக்கு சென்ற ஜெய்லாபுதீன் சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்தார். அப்போது முகமதாபீவி தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார்.

எஸ்.ஐ.,பாலசுப்பிரமணி தலைமையிலான போலீசார் விசாரித்தனர். மோப்பநாய் லக்கி வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் ஜெய்லாபுதீன் அருகே போய் நின்றதால் போதையில் மனைவியை கொன்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஜெய்லாபுதீனிடம் விசாரிக்கின்றனர்.

Advertisement