வட்டவடையில் மஞ்சு விரட்டு

மூணாறு: மூணாறு அருகே வட்டவடையில் மஞ்சு விரட்டு உற்சாகமாக நடந்தது.

கேரளாவில் மூணாறு அருகில் உள்ள வட்டவடை ஊராட்சியில் வட்டவடை, கோவிலூர், கொட்டாக்கொம்பூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த தமிழர்களால் ஆண்டுதோறும் மஞ்சு விரட்டு நடத்தப்படுகிறது.

கடந்தாண்டு பிப்.3ல் நடந்த மஞ்சுவிரட்டில் மாடு முட்டி பார்வையாளர் கோவிலூரைச் சேர்ந்த முருகன் 65, இறந்தார்.

அதனால் இந்தாண்டு மஞ்சுவிரட்டு நடத்த சற்று தயக்கம் காட்டினர். எனினும் பாரம்பரியமாக வீரத்தை பறைசாற்றும் மஞ்சுவிரட்டு உற்ஸவத்தை நடத்த வேண்டும் என பலர் கோரிக்கை வைத்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் கோவிலூரில் மதியம் 3:30 மணிக்கு மஞ்சுவிரட்டு துவங்கி நடந்தது.மஞ்சுவிரட்டில் பங்கேற்ற மாடுகளை தமிழர்களின் மரபுபடி இளைஞர்கள் ஏராளமானோர் விரட்டிச் சென்று அடக்க முயன்றனர்.

அதனை பொது மக்கள் உள்பட மலைவாழ் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் உற்சாகத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.

Advertisement