தேர்வு கண்காணிப்பு அலுவலர் நியமனம் 

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் பொதுத்தேர்வு நடத்தும் அதிகாரியாக, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் ஆனந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

மார்ச் 3ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்க உள்ளது. தேர்வுக்கான அனைத்து முன்னேற்பாட்டு பணிகளை தேர்வுத்துறை இயக்குனரகம் முடுக்கி விட்டுள்ளது. மாவட்ட அளவில், தேர்வுகளை திறம்பட, எவ்வித குளறுபடிகளும் இல்லாமல் நடத்த, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இணை இயக்குனர் நிலையிலான அதிகாரிகள், கண்காணிப்பு அதிகாரியாக தேர்வுத்துறையால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்துக்கு பொதுத்தேர்வு நடத்தும் அதிகாரியாக, தமிழ்நாடு, ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் ஆனந்தி நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் திருப்பூர் வர உள்ள இவர், பிளஸ் 2, பிளஸ் 1, மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்பாடுகள், மேற்கொள்ளப்பட்டுள்ள பணி குறித்து, முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் மற்றும் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, அறிவுரைகளை வழங்க உள்ளார்.

கடந்த 2023 - 2024ம் கல்வியாண்டிலும், திருப்பூர் மாவட்டத்தில் பொதுத்தேர்வு நடத்தும் கண்காணிப்பு அலுவலராக, ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் ஆனந்தி நியமிக்கப்பட்டிருந்தது, குறிப்பிடத்தக்கது.

Advertisement