ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய உத்தரவு
புதுச்சேரி: ஆயுள் தண்டனை கைதிகள் கருணா, வெங்கடேஷ் இருவரையும்விடுதலை செய்ய உத்தரவு வெளியானது.
காலாப்பட்டு மத்திய சிறையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 15ஆண்டுகள் கடந்த கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையிலான அட்வைசரி கமிட்டி உள்ளது. இதில், கடந்த 2000ம் ஆண்டு கொலை வழக்கில் சிறைக்கு சென்ற கருணா, 2003ம் ஆண்டு கொலை வழக்கில் சிறை சென்ற வெங்கடேஷ் ஆகியோர் தங்களை விடுவிக்க கோரி மனு தாக்கல் செய்தனர்.
அட்வைசரி கமிட்டி அதனை நிராகரித்தது. இந்நிலையில்,பரோலில் சென்றகருணா, கோயம்புத்துார் தப்பிச் சென்றார். போலீசார் கருணாவை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தது.இந்நிலையில் கருணா, வெங்கடேஷ் இருவரும் தங்களை விடுதலை செய்ய உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், இருவரையும் விடுதலை செய்ய பரிசீலிக்குமாறு கூறியதுடன், இருவருக்கும் இடைக்கால ஜாமின் வழங்கியது.
இந்நிலையில், கடந்த ஜன. 30ம் தேதி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் அட்வைசரி கமிட்டி கூடியது. இதில், கருணா, வெங்கடேஷ் இருவரையும் விடுதலை செய்ய கமிட்டி ஒப்புதல் அளித்தது. கமிட்டியின் பரிந்துரை கவர்னர் கைலாஷ்நாதனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கவர்னர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இரு கைதிகளும் விடுதலை செய்ய ஆணை வெளியானது.
மேலும்
-
ஆறுவழி சாலையில் பால பணி தீவிரம்
-
'கலைஞர் கனவு இல்லம்' திட்ட கம்பிகள் துருப்பிடித்து நாசம்
-
210 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டதற்கு திருவாலங்காடில் 1,000 மரக்கன்றுகள் நட திட்டம்
-
சினிமா இயக்குநர் ஷங்கரின் ரூ.10 கோடி சொத்து முடக்கம்
-
தண்ணீர்குளம் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
-
தமிழக அரசியலில் அனலை கிளப்பிய தர்மேந்திர பிரதான் 28ல் சென்னை வருகிறார்