மகளிர் கல்லுாரியில் ஜி.எஸ்.டி., கருத்தரங்கு

புதுச்சேரி : கோட்டக்குப்பம் அடுத்த பொம்மையார்பாளையம் ராஜேஸ்வரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வணிக நிர்வாகத் துறை ஜி.எஸ்.டி., சரக்கு மற்றும் சேவை வரி குறித்து கருத்தரங்கு நடந்தது.

கல்லுாரி செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். முதல்வர் பூமாதேவி முன்னிலை வகித்தார்.

பேராசிரியர் சாந்தி வரவேற்றார். புதுச்சேரி பல்கலைக் கழக வர்த்தகத் துறை இணைப் பேராசிரியர் விஜயகுமார் ஜி.எஸ்.டி., குறித்த அடிப்படை தகவல்களை விளக்கினார்.

பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்றனர். வர்த்தகத் துறை தலைவர் தேவி நன்றி கூறினார்.

Advertisement