போலீஸ் செய்திகள்.....
கஞ்சா விற்றவர்கள் கைது
திண்டுக்கல்: என்.ஜி.ஓ.,காலனி பகுதியில் கஞ்சா விற்ற என்.ஜி.ஓ.,காலனி ரெங்கநாதபுரத்தை சேர்ந்த விக்னேஷ்28, ஓடையூரை சேர்ந்த விக்னேஷ்25, என்.ஜி.ஓ.,காலனி கணபதி26, ஆகியோரை தாலுகா போலீசார் கைது செய்தனர்.
7 பேர் மீது வழக்கு
திண்டுக்கல் : சுப்ராம்பட்டரையை சேர்ந்த வழக்கறிஞர் உதயகுமாரை40, அமைச்சர் பெரியசாமி பாதுகாப்பு உதவியாளரான போலீஸ் ரவி, தி.மு.க., கவுன்சிலர் சுபாஷ் உட்பட சிலர் தாக்கினர். இதையறிந்த வழக்கறிஞர்கள் மறியலில் ஈடுபட்டனர். நேற்று 2 வது நாளாக வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸ்காரர் ரவி, தி.மு.க.,கவுன்சிலர் சுபாஷ் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
மூதாட்டியிடம் நகை திருடியவர் கைது
நத்தம்: சிறுகுடியை சேர்ந்தவர் ராமசாமி 70. இவரது மனைவி சந்திரா 65. பிப்.15 இரவு சிறுகுடியில் சந்தைக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்த போது பின்னால் வந்த நபர் சந்திராவை தலையில் தாக்கி 6 அரை பவுன் செயினை பறித்து விட்டு தப்பினார். சி.சி.டி.வி கேமரா பதிவுப்படி மதுரை மாவட்டம் திருமங்கலம்- உச்சப்பட்டியை சேர்ந்த ரஞ்சித்குமார் திரடியது தெரிந்தது. அவரது அலைபேசி சிக்னலை வைத்து கைது செய்தனர்.
மேலும்
-
தமிழக அரசியலில் அனலை கிளப்பிய தர்மேந்திர பிரதான் 28ல் சென்னை வருகிறார்
-
'தினமலர்' செய்தி எதிரொலி : நூலகத்தை சுற்றி வளர்ந்திருந்த செடிகள் அகற்ற
-
'ரீல்ஸ்' எடுக்க ஆற்றில் குதித்த பெண் டாக்டர் சடலமாக மீட்பு
-
ஹிந்தி பேசும் மாணவர்கள் தமிழ் படிப்பது ஏன்? பனாரஸ் பல்கலை உதவி பேராசிரியர் விளக்கம்
-
'ட்ரோன்' சர்வே, சொத்து வரிக்கு அபராதம் நிறுத்தம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு அறிவிப்பு
-
மோசடி மையங்களில் மீட்கப்பட்ட 1,000 சீனர்கள் நாடு திரும்பினர்