வழிபாட்டு குழு பாத யாத்திரை; முருக பக்தர்கள் பங்கேற்பு

அவிநாசி; அவிநாசி கஸ்தூரிபாய் வீதியில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் ஸ்ரீ பால தண்டாயுதபாணி தைப்பூச வழிபாட்டு குழுவினரின் 7ம் ஆண்டு விழா நடந்தது.

செல்வ விநாயகர் கோவிலில் இருந்து காவடி, பால்குடம் எடுத்து நான்கு ரத வீதிகளிலும் ஊர்வலமாக பக்தர்கள் சென்றனர்.

பின், ஸ்ரீ பால தண்டாயுதபாணிக்கு அன்னாபிஷேகம், அலங்காரம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement