சர்க்கரை நோய் மருத்துவ முகாம்

புதுச்சேரி : புதுச்சேரி சப்தகிரி அறக்கட்டளை சார்பில், லாஸ்பேட்டை தொகுதி, உழவர் சந்தை அருகே சர்க்கரை நோய்க்கான மருத்துவ முகாம் நடந்தது.

முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து முகாமை துவக்கி வைத்தார். சப்தரிகிரி அறக்கட்டளை பொறுப்பாளர் ரமேஷ்குமார் வரவேற்றார். முகாமில், பொதுமக்கள் நீரிழிவு நோய்க்கான பரிசோதனைகள் செய்து, மருத்துவ ஆலோசனை பெற்றனர்.

முகாம் ஏற்பாடுகளை, லயன்ஸ் கிளப் ஆப் பாண்டிச்சேரி, எம்.வி.ஆர்., மருத்துவமனை குழுவினர் செய்திருந்தனர். சப்தகிரி அறக்கட்டளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement