சாலை மறியல் முயற்சி

அரியாங்குப்பம்: தேசிய ஊரக வேலைப்பணியை முழுமையாக வழங்க வலியுறுத்தி, சாலை மறியல் செய்ய முயன்ற, பொது மக்களை போலீசார் சமாதானப்படுத்தினர்

மணவெளி தொகுதியில், தேசிய ஊரக வேலை திட்ட பணிகள் நடக்கிறது. அதில், தவளக்குப்பம், இடையார்பாளையம், நாணமேடு உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த மக்கள், தங்களுக்கு 100 நாட்கள் வேலையை முழுமையாக கொடுக்காமல், குறைந்த நாட்கள் கொடுப்பதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதனிடையே நேற்று காலை 10:30 மணிக்கு இடையார்பாளையம் பகுதியில் திரண்ட அப்பகுதி மக்கள், தொடர்ந்து 100 நாட்கள் வேலையை கொடுக்க வேண்டும் என, புதுச்சேரி - கடலுார் சாலையில் மறியல் செய்ய முயன்றனர். தகவலறிந்து வந்த தவளக்குப்பம் போலீசார், இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தை ஏற்று, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement