துணை தாசில்தார்கள் 8 பேர் திடீர் இடமாற்றம்
புதுச்சேரி : துணை தாசில்தார்கள் 8 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி மாநில அரசுக்கு, வருவாய் தரும் முக்கிய துறைகளில் ஒன்றான, பத்திர பதிவு துறையில், ஏராளமான சப்ரிஜிஸ்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், பல சப்ரிஜிஸ்டர் அலுவலகங்களில், பத்திர பதிவு பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், பல்வேறு இடங்களில் பணியாற்றி வரும் 8 துணை தாசில்தார்கள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதில், 7 பேர் பத்திர பதிவு துறைக்கு மாற்றப்பட்டனர்.
புதுச்சேரி பத்திர பதிவு துறை சப் ரிஜிஸ்டராக உள்ள துணை தாசில்தார் பாலமுருகன், கலால் சப் கலெக்டர் அலுவலகத்திற்கும், தேர்தல் துறை துணை தாசில்தார்கள் வேல்முருகன், அனிஷ்குமார், மணிமாறன், பாகூர் தாலுகா அலுவலக துணை தாசில்தார் நாகராஜன், காரைக்கால் தாலுகா அலுவலக துணை தாசில்தார்கள் தண்டாயுதபாணி, தீனதயாளன், வில்லியனுார் சப் கலெக்டர் அலுவலக துணை தாசில்தார் ஷிலாராணி ஆகியோர், பத்திர பதிவுத்துறைக்கும், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான ஆணையை துணை கலெக்டர் வினயராஜ் வெளியிட்டுள்ளார்.
மேலும்
-
ஆறுவழி சாலையில் பால பணி தீவிரம்
-
'கலைஞர் கனவு இல்லம்' திட்ட கம்பிகள் துருப்பிடித்து நாசம்
-
210 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டதற்கு திருவாலங்காடில் 1,000 மரக்கன்றுகள் நட திட்டம்
-
சினிமா இயக்குநர் ஷங்கரின் ரூ.10 கோடி சொத்து முடக்கம்
-
தண்ணீர்குளம் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
-
தமிழக அரசியலில் அனலை கிளப்பிய தர்மேந்திர பிரதான் 28ல் சென்னை வருகிறார்