சிறப்பு சொற்பொழிவு

புதுச்சேரி: புதுச்சேரி அரசு கலை, பண்பாட்டுத்துறை, தமிழ் வளர்ச்சி சிறகம் சார்பில், 'சிங்கப்பூரில் தமிழ்க் கல்வியும், தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தின் பயன்பாடும்' என்ற தலைப்பில், சிறப்பு சொற்பொழிவு நடந்தது.

லாஸ்பேட்டை காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தில் நடந்த சொற்பொழிவை அமைச்சர் லட்சுமிநாராயணன் துவக்கி வைத்து பேசினார். தமிழ் வளர்ச்சி சிறகம் சிறப்புப்பணி அதிகாரி வாசுகி ராஜாராம் வரவேற்றார்.

அரசு செயலர் நெடுஞ்செழியன் நோக்கவுரை ஆற்றினார்.

காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மைய இயக்குநர் செல்வராஜ், சிங்கப்பூர் கல்வியாளர் ரத்தினமாலா பரிமளம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பட்டமேற்படிப்ப மைய தமிழ்த்துறை தலைவர் கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.

மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement