திருப்புவனத்தில் நாய்கள் தொல்லை
திருப்புவனம் : திருப்புவனம் நகரில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாட வேண்டியுள்ளது.
திருப்புவனம் நகரில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர்.இங்கு ஆரம்பத்தில் ஒருசில தெரு நாய்கள் இருந்த நேரத்தில் தற்போது கூட்டம் கூட்டமாக நாய்கள் வலம் வருகின்றன.
திருப்புவனத்தில் செயல்படும் 30க்கும் மேற்பட்ட ஆடு, கோழி இறைச்சி கடைகளில் வீசி எறியப்படும் கழிவுகளை உண்டு வாழும் இவை உணவு கிடைக்காத போது ஒன்றுடன் ஒன்று மோதி சண்டையிட்டு ரோட்டில் செல்பவர்களை விரட்டி கடிப்பதுடன் ரோட்டின் குறுக்கே ஓடுவதால் டூவீலர்களில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர்.
தெரு நாய்களை கட்டுப்படுத்த திருப்புவனம் பேரூராட்சி நிர்வாகம் எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. தெரு நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
விபத்து வாகனத்தை அகற்றுவதில் அலட்சியம் திருவாலங்காடு வாகன ஓட்டிகள் திக்... திக்
-
ஆசிரியரை கொடூரமாக தாக்கி பணம் பறித்த சிறார்கள் சிக்கினர்
-
மஹாராஷ்டிரா துணை முதல்வர் ஷிண்டேவுக்கு கொலை மிரட்டல்
-
ஏ.டி.எம்.,மில் எரிந்த நோட்டு பணம் எடுத்தவருக்கு அதிர்ச்சி
-
கிணற்றில் விழுந்த சிறுத்தை கூண்டு வைத்து பத்திரமாக மீட்பு
-
தீப்பிடித்த ஆம்னி பஸ் 26 பேர் உயிர் தப்பினர்