சிங்கம்புணரியில் இன்று மருத்துவ முகாம்
சிங்கம்புணரி : ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் 18 வயது வரையிலான மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 10:00 மணிக்கு நடக்கிறது. முகாமில் தேசிய அடையாள அட்டை, தனித்துவ அடையாள அட்டை, உதவி உபகரணங்கள் மற்றும் உதவித்தொகை பெறுவதற்கான பதிவு செய்யப்படுகிறது.
முகாமில் மனநல மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், கண் மருத்துவர், காது, மூக்கு தொண்டை மருத்துவர் முட நீக்கியல் மருத்துவர் பங்கேற்கின்றனர். இதில் அடையாள அட்டை, ஆதார் கார்டு நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 4, ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம் என சிங்கம்புணரி வட்டார வளமைய மேற்பார்வையாளர் சேவுகமூர்த்தி தெரிவித்துள்ளார்.
* திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை பிப்.20 ல் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. திருப்புவனம் வட்டாரத்தைச் சேர்ந்த மாற்றுதிறனாளிகள் மருத்துவ சான்று, உதவி தொகை சான்று, தேசிய அடையாள அட்டை , சலுகை கட்டண பஸ் பாஸ் உள்ளிட்டவற்றிற்கான சான்று ஆகியவற்றை இந்த சிறப்பு மருத்துவ முகாமில் பெற்றுக்கொள்ளலாம்.
வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜா கூறுகையில்: ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் மற்றும் மாவட்ட மாற்று திறனாளி நல வாரியம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. 18 வயதிற்குட்பட்ட மாற்றுதிறனாளிகள் இதில் பங்கேற்று பயன்பெறலாம், என்றார்.
மேலும்
-
கும்மிடி கலைமகள் பள்ளி கலை பண்பாட்டு விழா
-
ராமேஸ்வரத்தில் சுவாமி அம்மன் வீதி உலா
-
பொதட்டூர்பேட்டை பஸ் நிலையத்தில் தனியார் வாகனங்களால் நெரிசல்
-
இரு குழந்தைகள் உட்பட 4 பேர் உடல்களை ஒப்படைத்தது ஹமாஸ்
-
டில்லி பெண்களுக்கு மார்ச் 8 முதல் கிடைக்கும் ரூ.2,5-00! முதல்வராக பதவியேற்ற ரேகா குப்தா அறிவிப்பு
-
நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொலை, கொள்ளைகள் சொல்கிறார் பொன் ராதாகிருஷ்ணன்