பள்ளியில் விஷ வண்டுகள் அழிப்பு

திருவாடானை : திருவாடானை சிநேகவல்லிபுரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி வளாகத்தில் உள்ள சுவற்றின் மேற்பகுதியில் விஷ வண்டுகள் கூடு கட்டியிருந்தது.

இதனால் மாணவர்கள் அச்சமடைந்தனர். திருவாடானை தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வீரர்கள் தீப்பந்தம் மூலம் வண்டுகளை அழித்தனர்.

Advertisement