பைக்கில் வேகமாக வலம் வரும் சிறுவர்கள்
காரைக்குடி : காரைக்குடியில் மாணவர்கள் விலை உயர்ந்த பைக்கில் வேகமாக செல்வதால் விபத்து அபாயம் உள்ளது என்பதை உணர்வதில்லை.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பைக்குகளை பயன்படுத்தும் சிறார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விதிமுறைகளை மீறி 3 முதல் 4 பேர் அமர்ந்து வேகமாக பயணிக்கின்றனர். மாணவர்களின் இந்த வேகத்தால் அவர்களுக்கு மட்டுமின்றி, எதிரே வருபவர்களுக்கும் அபாயம் நிலவுகிறது.
பள்ளிக்கு பைக்கில் வர தடை விதித்திருந்தாலும், பள்ளிக்கு சற்று தொலைவிலேயே பைக்கை நிறுத்திவிட்டு பள்ளிக்குச் செல்வதை மாணவர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். பெற்றோர்கள் பலரும், ஆபத்தை உணராமல் தங்கள் பிள்ளைகளுக்கு பைக்குகளை கொடுத்து அனுப்புகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல் துறையும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
கடந்த ஆண்டு மாவட்ட எஸ்.பி., சிறுவர்கள் பைக் ஓட்டுவதை தடுக்க அவர்களது பெற்றோர் மீது வழக்குப்பதிய உத்தரவிட்டார். 2024 பிப்ரவரியில் பைக் ஓட்டிய சிறுவனின் பெற்றோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். காரைக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் சிறுவனின் பெற்றோர்களுக்கு ரூ.26 ஆயிரம் அபராதம் விதித்தார். இது மாணவர்களிடையேயும் பெற்றோர்களிடையேயும் அச்சத்தை ஏற்படுத்தியது.
அதன் பிறகு போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் மீண்டும் மாணவர்கள் விதிமுறைகளை மீறி பைக்கில் வலம் வருவது அதிகரித்து வருகிறது.
மேலும்
-
ஏ.டி.எம்.,மில் எரிந்த நோட்டு பணம் எடுத்தவருக்கு அதிர்ச்சி
-
கிணற்றில் விழுந்த சிறுத்தை கூண்டு வைத்து பத்திரமாக மீட்பு
-
தீப்பிடித்த ஆம்னி பஸ் 26 பேர் உயிர் தப்பினர்
-
மின் இணைப்பு இல்லாமல் வீணாகி வரும் வி.ஏ.ஓ., அலுவலகம்
-
ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மறியலுக்கு அனுமதி மறுப்பு
-
விவசாயி தெரிவித்த குறையை உடனடியாக தீர்த்த கலெக்டர்