இலவச மனைபட்டா கேட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
விருத்தாசலம்: இலவச மனைபட்டா கேட்டு, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் முன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு நிலவியது.
திட்டக்குடி அடுத்த ராமநத்தம் காந்தி நகரில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல், இந்து - ஆதியன், இந்து மலை குறவர் மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு வசிக்கும் மக்கள் இலவச மனைபட்டா கேட்டு, அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எவ்வித பயனும் இல்லை.
இதில், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் விருத்தாசலம் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய கம்யூ., கட்சி கிளை செயலர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.
பொன்னுசாமி, மாரி, சின்னதம்பி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலர் துரை கலந்து கொண்டு பேசினார்.
மாவட்ட நிர்வாக குழு சுப்ரமணியன், முருகையன், ஒன்றிய செயலர்கள் நிதி உலகநாதன், கோவிந்தராசு, வட்ட செயலர் பாலமுருகன், ஒன்றிய துணை செயலர் தேவா, மாவட்ட குழு அம்பிகா, நகர செயலர் செல்வராசு, பெரியசாமி மற்றும் கிராம மக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
அதன்பின், கோரிக்கை மனுவை தனி தாசில்தார் வெற்றிவேலிடம் வழங்கினர்.
மனுவை பெற்றுக்கொண்ட தனி தாசில்தார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
மேலும்
-
பூட்டிக் கிடக்கும் பாலுாட்டும் அறை
-
மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு பஸ் வசதியில்லாமல் மக்கள் அவதி
-
தொழிற் கூட்டுறவு சங்க இணை உறுப்பினர் சேர்க்கைக்கு அழைப்பு
-
சிவகாசிக்கு போதிய டவுன் பஸ்கள் இல்லை ஸ்ரீவி.,யில் தவிக்கும் கல்லுாரி மாணவர்கள்
-
புறநகர் பகுதிகளை எட்டி கூட பார்ப்பதில்லை; என்றைக்குத்தான் தீர்வு
-
கொசு ஒழிப்பை தீவிரப்படுத்த உள்ளாட்சித்துறை ஆலோசனை