கொசு ஒழிப்பை தீவிரப்படுத்த உள்ளாட்சித்துறை ஆலோசனை
புதுச்சேரி : புதுச்சேரியில் உள்ளாட்சித்துறை சார்பில், கொசு ஒழிப்பு மற்றும் பெருக்கத்தை கட்டுப்படுத்துதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.
உள்ளாட்சி துறை துணை இயக்குநர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். துணை இயக்குநர் ரத்னா, கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்ரமணியம், நகராட்சி ஆணையர் கந்தசாமி, உழவர்கரை ஆணையர் சுரேஷ்ராஜன், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் ரமேஷ், சதாசிவம், எழில்ராஜன், உதவி பொறியாளர் ராமநாதன், மாநில திட்ட அதிகாரி வசந்தகுமாரி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். மேலும், காரைக்கால் நகராட்சி ஆணையர் சத்யா, ஏனாம் நகராட்சி ஆணையர் கந்தவல்லி ராமகிருஷ்ணன் மற்றும் மாகேவை சேர்ந்த அதிகாரிகள் காணொளி வாயிலாக பங்கேற்றனர்.
கூட்டத்தில், புதுச்சேரியில் பெருகி வரும் கொசுவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளாக, அனைத்து பகுதிகளிலும் குப்பைகள் தேங்காத வகையில், உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும். கழிவுநீர் கால்வாய்களை போர்க்கால அடிப்படையில் துார்வார வேண்டும். மருந்து தெளித்தல் மற்றும் புகை மருந்து அடித்தல் பணிகள் மூலம், கொசு ஒழிப்பை தீவிரப்படுத்த வேண்டும். பொதுப்பணித்துறை வாய்க்கால், கால்வாய்களை அத்துறையின் மூலம் துாரவார அறிவுறுத்த வேண்டும் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதென ஆலோசித்தனர்.
மேலும்
-
மின் இணைப்பு இல்லாமல் வீணாகி வரும் வி.ஏ.ஓ., அலுவலகம்
-
ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மறியலுக்கு அனுமதி மறுப்பு
-
விவசாயி தெரிவித்த குறையை உடனடியாக தீர்த்த கலெக்டர்
-
ஆறுவழி சாலையில் பால பணி தீவிரம்
-
'கலைஞர் கனவு இல்லம்' திட்ட கம்பிகள் துருப்பிடித்து நாசம்
-
210 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டதற்கு திருவாலங்காடில் 1,000 மரக்கன்றுகள் நட திட்டம்