கோவை - பெங்களூரு கூடுதல் விமான சேவை

கோவை; கோவை - பெங்களூரு இடையே, ஒரு வார காலத்துக்கு விமான சேவையை, ஏர் இந்தியா வழங்குகிறது.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, பல்வேறு உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை, விமான நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தற்போது கோவையிலிருந்து பெங்களூருவுக்கு, கூடுதல் விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் வழங்குகிறது. வரும், 22 முதல், 28ம் தேதி வரை, இச்சேவை வழங்கப்படுகிறது.

வரும், 22, 24, 26 தேதிகளில் காலை, 10:15 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் விமானம், கோவைக்கு காலை 11:25 மணிக்கு வந்தடையும்.

அதேபோல், கோவையிலிருந்து மதியம், 12:10 மணிக்கு புறப்பட்டு, பெங்களூருவுக்கு மதியம், 1:20 மணிக்கு சென்றடையும்.

வரும், 23, 25, 27 ஆகிய தேதிகளில், பெங்களூருவில் இருந்து மதியம், 1:55 மணிக்கு புறப்படும் விமானம், கோவையை மாலை 3:05 மணிக்கு வந்தடையும்.

கோவையிலிருந்து மாலை, 3:50 மணிக்கு புறப்படும் விமானம், பெங்களூருவை மாலை 5:00 மணிக்கு சென்றடையும்.

Advertisement