தாடிகொம்பு கோயிலில் நேத்ர தரிசனம்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3854395.jpg?width=1000&height=625)
திண்டுக்கல்: தாடிக்கொம்பு சவுந்திராஜ பெருமாள் கோயிலில் நேத்ர தரிசனம் நடந்தது.
வாரம் ஒருமுறை பெருமாளின் திருநாமம் திறந்து கண்பார்வை பக்தர்களுக்கு நேரடியாக காட்சியளிக்கும்.
இந்த காட்சியை நேத்ர தரிசனம் என்பர். திருப்பதிக்கு அடுத்தபடியாக தாடிக்கொம்பு கோயிலில் வாரம்தோறும் வியாழன் தோறும் இந்த தரிசனம் நடைபெற்று வருகிறது.இக்காட்சியை நேற்று ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
இதோடு 10, 12ம் வகுப்பு பொது தேர்வினை முன்னிட்டு தனியார் பள்ளி மாணவர்கள் தாடிக்கொம்பு பெருமாள் கோயில் 'ஹயக்ரீவர்' சன்னதியில் தங்களது ஹால் டிக்கெட்,பேனா, புத்தகங்களை வைத்து சிறப்பு பூஜை செய்து பிரசாதம் பெற்று சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement