ஆர்ப்பாட்டம்

மதுரை: இந்தியர்கள் மீது மனித உரிமை மீறலில் ஈடுபட்ட அமெரிக்க அரசை கண்டித்தும், அமைச்சர் ஜெய்சங்கர் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே தென்னிந்திய நுகர்வோர், மக்கள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தலைவர் மணவாளன் தலைமை வகித்தார். செயலாளர் சிங்கராசு, பொருளாளர் தியாகராஜன், வழக்கறிஞர் அணி தலைவர் முத்துகிருஷ்ணன், இளைஞரணி தலைவர் சரவணன், நிர்வாகிகள் ஆனந்தராஜ், ஜெயலட்சுமி, செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன், பாண்டியராஜன் பங்கேற்றனர்.

Advertisement