திருப்புவனம் கால்நடை சந்தையில் குவிந்த வியாபாரிகள்

திருப்புவனம் : திருப்புவனத்தில் நேற்று காலை நடந்த கால்நடை சந்தையில் ஆடு, கோழி, சேவல் வாங்க வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் குவிந்தனர்.

திருப்புவனத்தில் வாரம்தோறும் செவ்வாய்கிழமை காலை 5:00 மணி முதல் 10:00 மணி வரை கால்நடை சந்தையும் அதன்பின் காய்கறி சந்தையும் நடைபெறும். வரும் 26ம் தேதி சிவராத்திரி திருவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில் நேற்றைய சந்தையில் அதிகளவு ஆடு, கோழி, சேவல் விற்பனையாகின. 10 கிலோ எடை கொண்ட வெள்ளாடு 7 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரம் ரூபாயாகவும், 20 கிலோ எடை கொண்ட கிடா 18 ஆயிரத்தில் இருந்து 21 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனையாகின.

சிவராத்திரி விழாவில் கிடா, சேவல் தான் அதிகளவு பலியிடப்படும், நேற்றைய சந்தையில் கிடா, சேவலின் விலை கிடுகிடு வென உயர்ந்து காணப்பட்டது. கால்நடைகள் வாங்க வெளியூர் வியாபாரிகள் பலரும் வாகனங்களில் குவிந்ததால் மதுரை- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisement