ரோட்டில் கழிவுநீர் மாணவர்கள் பாதிப்பு

திருமங்கலம்: திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கீழஉரப்பனுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் உள்ள தெருக்களில் போதிய சாக்கடை வசதி இல்லாததால் பள்ளியின் வாசல் வரை சாக்கடை நீர் தேங்கியுள்ளது. இதனால் மாணவர்கள் நோய் தொற்றுக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விவேக்: பள்ளியை சுற்றி சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. பள்ளி வளாகம் முன்பே சாக்கடை தேங்கி கொசு உற்பத்தியாகிறது. மாணவர்கள் நோய் பாதிப்பிற்குள்ளாகும் முன் ஊராட்சி நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

Advertisement