அகில இந்திய கடிதப்போட்டி; பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு

சேலம்: சேலம் மேற்கு கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் பார்த்திபன் அறிக்கை: அஞ்சல் துறை, அகில இந்திய அளவில் கடிதப்போட்டி நடத்துகிறது. அதற்கான தலைப்பு, 'நீங்கள் கடல் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். ஏன், எப்படி, அவர்கள் உங்களை நன்றாக கவனித்து கொள்ள வேண்டும்' என்பதை விளக்கி, 800 வார்த்தைகளுக்கு மிகாமல் கடிதம் இருக்க வேண்டும்.

மார்ச், 4 காலை, 10:00 மணிக்கு கடிதப்போட்டி நடக்கும். அதில் பங்கேற்க விரும்புவோர், தேவையான பொருட்களை கொண்டு வர வேண்டும். வயது, 9 - 15க்குள் இருக்க வேண்டும். ஆங்கிலம், தமிழ், ஹிந்தி என, ஏதாவது ஒரு மொழியில் எழுதலாம்.

கடிதத்தை, 'முதன்மை அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை - 600 002' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். அத்துடன் வயது, ஆதார், பள்ளி சான்றுகளை இணைக்க வேண்டும். மாநில அளவில் பரிசு பெறும் கடிதத்துக்கு முதல் மூன்று பரிசுகள் முறையே, 25,000, 10,000, 5,000 ரூபாய் வழங்கப்படும்.
அகில இந்திய அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல், 3 பரிசுகள் முறையே, 50,000, 25,000, 10,000 ரூபாய் பெறலாம். அத்துடன் சான்றிதழும் உண்டு. போட்டி நடக்கும் இடம் பின்னர் தெரிவிக்கப்படும். தகவலுக்கு, 90033 - 28218 என்ற எண்ணில் பேசலாம்.

Advertisement