கொப்பரை, நிலக்கடலை, அவரை ஏலம்; ரூ.8.18 லட்சத்துக்கு விற்பனை

ஓமலுார்: ஓமலுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. சுற்றுவட்டார விவசாயிகள், 152 மூட்டைகளில் கொப்பரை கொண்டு வந்தனர். வியாபாரிகள், ஒரு கிலோ, 139.99 முதல், 143 ரூபாய் வரை ஏலம் கோரினர். 61.86 குவிண்டால் மூலம், 8,03,818 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.

அதேபோல், 6 மூட்டைகளில் நிலக்கடலை கொண்டுவரப்பட்டது. கிலோ, 38 ரூபாய்க்கு ஏலம் கோரினர், 2.65 குவிண்டால் நிலக்கடலை மூலம், 10,070 ரூபாய்க்கு விற்பனை நடந்தது. தொடர்ந்து ஒரு கிலோ அவரையை, 100 ரூபாய்க்கு ஏலம் கோரினர். 50 கிலோ அவரை மூலம், 5,000 ரூபாய்க்கு விற்பனை நடந்ததாக, விற்பனையாளர் ஆனந்தி கூறினார்.

ரூ.3 லட்சம்

சேலம், உத்தமசோழபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. 2,399 கிலோ வரத்து இருந்தது. ஒரு கிலோ முதல் தர கொப்பரை, 110 முதல், 143 ரூபாய் வரை விலைபோனது. இரண்டாம் தரம் கிலோ, 95 முதல், 120 ரூபாய் வரை விலைபோனது. 2,399 கிலோ மூலம், 3,05,530 ரூபாய்க்கு விற்பனை நடந்ததாக, விற்பனை கூட கண்காணிப்பாளர் ரஞ்சித் தெரிவித்தார். கடந்த வாரம் கிலோ கொப்பரை, 100 முதல், 145 ரூபாய் வரை விலைபோனது.

Advertisement