5 ஆண்டுகளாக மக்கள் படும்பாடு
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3854404.jpg?width=1000&height=625)
திருமங்கலம்: திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் சாத்தங்குடி ஊராட்சி போல்நாயக்கன்பட்டி, புள்ளமுத்துாருக்கு செல்லும் ரோடு 5 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது சாத்தங்குடி - போல்நாயக்கன்பட்டி ரோடு மண் ரோடாக மாறிவிட்டது.
புள்ளமுத்துார் ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால் டூவீலரில் கூட செல்ல முடியவில்லை. இரவில் விழுந்து காயமடைகின்றனர்.
போல்நாயக்கன்பட்டி ரோடு ஊராட்சி ஒன்றியத்திலிருந்து நெடுஞ்சாலைத் துறைக்கு மாற்றப்பட்ட நிலையில் அந்த ரோட்டை அமைக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
புள்ளமுத்துார் ரோட்டை சீரமைக்க ஊராட்சி ஒன்றியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இரண்டு கிராமங்களுக்கும் ரோடு அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement