போலீஸ் செய்திகள்...

கிணற்றில் மிதந்த -------------------------ஆண் உடல்



மேலுார்: மில்கேட் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் 26, கட்டட தொழிலாளி. பிப். 10 ல் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் அதே பகுதியில் அரசு என்பவரது கிணற்றில் பிணமாக மிதந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

கல்குவாரி தொழிலாளி பலி



மேலுார்: கீழவளவில் தனியார் குவாரியில் மத்திய பிரதேச மாநிலம் அனுப்பூர் சுரேஷ் சிங் 21, கல் உடைக்கும் தொழிலாளியாக வேலை பார்த்தார். நேற்று காலை வேலைக்காக குவாரிக்குள் இறங்கியவர் தவறி விழுந்ததில் இறந்தார். கீழவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.

ஜீப் மீது கார் மோதி ஆறுபேர் காயம்



திருமங்கலம்: மதுரையை சேர்ந்த சிலர் திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழிச்சாலை வழியாக குற்றாலம் சென்றனர். நேற்று அதிகாலை செங்குளம் பிரிவு அருகே டீ குடிப்பதற்காக ஜீப்பை நிறுத்தி இருந்தனர். அதேநேரம் மதுரையில் இருந்து சிவகாசி சென்ற கார் நின்றிருந்த ஜீப் மீது மோதியது. காரில் வந்த பாக்கியராஜ், பாண்டியராஜ், ஜீப்பில் இருந்த பாண்டி, பூங்கொடி, கார்த்தி உட்பட 6 பேர் காயம் அடைந்தனர். திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

புகையிலை பறிமுதல்: ஒருவர் கைது



கள்ளிக்குடி: நேற்று முன்தினம் இரவு கள்ளிக்குடி போலீசார் கல்லுப்பட்டி ரோட்டில் ரோந்து சென்றனர். வடக்கம்பட்டி பிரிவு அருகே தென்காசி மாவட்டம் கடையநல்லுார் நடுக்கோட்டை ஈஸ்வரன் 37, சந்தேகப்படும் வகையில் மூடைகளுடன் நின்று கொண்டிருந்தார். அவரிடம் விசாரித்த போது தடை செய்த 60 கிலோ புகையிலையை கடத்தி வந்தது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

செயின் பறித்தவர் கைது



மதுரை: மதுரை டி.எம்.நகரைச் சேர்ந்தவர் அபிராமி. தனியார் மருத்துவமனை ஊழியர். பிப்.7ல் மதியம் பணிக்கு சென்றவரை ஒருவர் கத்தியை காட்டி அவர் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்து தப்பினார். கே.புதுார் போலீசார் விசாரித்தனர். ஒத்தக்கடையில் இருந்த சின்னமங்கலக்குடி சுரேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

அலைபேசி -------------------------------பறித்தவர் கைது



மதுரை: திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷனில் பாயின்ட்ஸ் மேனாக பணிபுரிபவர் அபிஜித் குமார் சிங் 28. பிப். 13 அதிகாலை 4:20 மணிக்கு பணியில் இருந்த போது அங்குவந்த நபர் அவரை ஜல்லிக்கற்களால் தாக்கிவிட்டு அலைபேசியை பறித்துச் சென்றார்.

பலத்த காயத்துடன் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ரயில்வே போலீசார் நாமக்கல் பள்ளிப்பாளையம் தனசேகரனை 24, கைது செய்தனர்.

Advertisement