தலைவர் அறையில் கவுன்சில் கூட்டம்
திருமங்கலம்: திருமங்கலம் நகராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் ரம்யா தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ஆதவன், கமிஷனர் அசோக்குமார் முன்னிலை வகித்தனர்.
10வது வார்டு குறிஞ்சி நகர் பகுதியில் ரூ. 13 லட்சம் செலவில் பாலம் அமைப்பது, மீனாட்சி அம்மன் கோயில் அருகில் புதிய அறிவுசார் மையத்திற்கு வசதி ஏற்படுத்துவது உட்பட 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகராட்சி பகுதிகளில் மின்விளக்குகள் முறையாக எரிவது இல்லை என கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.
ஒப்பந்த நிறுவனத்தில் ஆள் பற்றாக்குறையால் விளக்குகளை மாற்ற தாமதம் ஏற்படுவதாக கமிஷனர் தெரிவித்தார். இக்கூட்டம் அரங்கில் நடக்காமல் தலைவர் அறையில் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement