மதுரையில் பிப்.21ல் வேலைவாய்ப்பு முகாம்

மதுரை: மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் அமைப்பினர் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் பிப்.21ல் நடக்க உள்ளது.

இதில் 30 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கல்வித் தகுதிக்கேற்ப இளைஞர்களை தேர்வு செய்ய உள்ளன. பத்தாம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ முடித்தோரும் பங்கேற்கலாம். வேலை அளிக்கும் நிறுவனங்கள்www.tnprivatejobs.tn.gov.inஎன்ற இணையதள முகவரியில் தங்கள் விவரங்களை பதிவேற்றம் செய்யலாம்.

பங்கேற்க விரும்பும் இளைஞர்கள் கல்விச்சான்று, ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, போட்டோவுடன் அன்று காலை 10:00 மணிக்கு புதுார் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வரவேண்டும். இந்நிறுவனங்களில் வேலை பெறுவதால், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு பாதிக்காது.

Advertisement