துண்டு பிரசுரம் வழங்கிய 30 பேர் மீது வழக்கு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை பிரச்னை சம்பந்தமாக தடையை மீறி அனுமதியின்றி துண்டு பிரசுரங்கள் வழங்கிய 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருப்பரங்குன்றம் மலை பிரச்னை குறித்து பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்க தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க கிளைச் செயலாளர் தியாகராஜன் சில தினங்களுக்கு முன் போலீசாரிடம் மனு அளித்தார்.

இதில் நீதிமன்ற தடை உத்தரவு இருப்பதால் துண்டு பிரசுரங்கள் வழங்க அனுமதி மறுக்கப்பட்டது.

நேற்று காலை அனுமதியின்றி 30க்கும் மேற்பட்டோர், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.

அவர்களை போலீசார் தடுத்தனர். அவர்களிடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அனுமதியின்றி துண்டு பிரசுரம் வழங்கிய தீண்டாமை முன்னணி சாமுவேல்ராஜ், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க கிளைச் செயலாளர் தியாகராஜன், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் நிர்வாகிகள் ஐந்து பெண்கள் உட்பட 30 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Advertisement