பசவேஸ்வர சுவாமி உற்சவம்



பசவேஸ்வர சுவாமி உற்சவம்


ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஒன்றியம், தரணிசந்திரத்தில், பசவேஸ்வர சுவாமிக்கு பொதுமக்கள் விரதம் இருந்து தலைமேல் தேங்காய் உடைத்து, தீ மிதித்தும், பெண்கள் மாவிளக்கு ஏந்தியும் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்தனர். நேற்று பசவேஸ்வர சுவாமி உற்சவ விழா நடந்தது. தரணிசந்திரத்தின் முக்கிய வீதிகளில் பசவேஸ்வர சுவாமி உலா வந்து, மீண்டும் கோவிலுக்கு சென்றது. ஊர் கவுண்டர் முனுசாமி, கிருஷ்ணகிரி, தி.மு.க., ஆதிதிராவிடர் நலப்பிரிவு, மேற்கு மாவட்ட துணை அமைப்பாளர் கோவிந்தன், தரணிசந்திரம் ஊர்மக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement