தேன்கனிக்கோட்டை தக்காளிவெளிநாடுகளுக்கு ஏற்றுமதி


தேன்கனிக்கோட்டை தக்காளிவெளிநாடுகளுக்கு ஏற்றுமதி


ஓசூர்:தேன்கனிக்கோட்டையில், இருதுக்கோட்டை, போகசந்திரம், பேளாளம், தோட்டிகுப்பம், சந்தனப்பள்ளி, நமலிலேரி, கூச்சுவாடி பகுதிகளில், விவசாயிகள் பயிர் செய்துள்ள தக்காளியை, மொத்த வியாபாரிகள் தோட்டத்திற்கே சென்று, காய்களாகவே பறித்து, வெளிநாடுகளுக்கு அனுப்ப வாங்கி செல்கின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், 'தக்காளி சாகுபடியில் கடந்த, 6 மாதங்களாகவே நிலையான விலை கிடைக்காமல் உள்ளது. தற்போது அந்தமான், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு அனுப்ப, சில மொத்த வியாபாரிகள் தோட்டங்களுக்கே வந்து, காய்களை வாங்கி செல்கின்றனர். வெளிநாடுகளுக்கு செல்வதற்குள் பழுத்து விடுவதாக கூறி, தரமுள்ள காய்களையே பறித்து, தரம் பிரித்து, முதல் ரக தக்காளியை கூடைக்கு, 400 ரூபாய் வரை கொடுத்து வாங்கி செல்கின்றனர். தற்போது, உள்ளூரில் விலை வீழ்ச்சியால் வெளிநாட்டு வியாபாரிகள் வந்து மொத்தமாக தோட்டத்திலேயே விலை கொடுத்து வாங்கி செல்வதால், சற்று ஆறுதலாக உள்ளது' என்றனர்.

Advertisement