கால்நடை தடுப்பூசி முகாம் நாளை முதல் துவக்கம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில், கால்நடை கன்று வீச்சு நோய் தடுப்பூசி முகாமில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கால்நடை கன்று வீச்சு நோய் தடுப்பூசி முகாம் நாளை 19ம் தேதி முதல் துவங்குகிறது. இந்த முகாம் வரும், மார்ச் 19ம் தேதி வரை நடக்கிறது.
கறவை மாடுகளுக்கு கருச்சிதைவு நோய் ஏற்படுகிறது. இதனைத் தவிர்ப்பதற்காக தேசிய கால்நடைகள் நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் கன்று வீச்சு நோய்க்கான தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 4 முதல் 8 மாதம் வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு கருச்சிதைவு தடுப்பூசி போடப்பட வேண்டும்.ஒருமுறை வாழ்நாள் தடுப்பூசி போடுவதால் கால்நடைகள் நீண்டகால எதிர்ப்பு சக்தியை உறுதிப்படுத்துகின்றன. இதனால் விவசாயிகள் கால்நடைகளுடன் முகாமில் பங்கேற்று பயனடையலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
'கலைஞர் கனவு இல்லம்' திட்ட கம்பிகள் துருப்பிடித்து நாசம்
-
210 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டதற்கு திருவாலங்காடில் 1,000 மரக்கன்றுகள் நட திட்டம்
-
சினிமா இயக்குநர் ஷங்கரின் ரூ.10 கோடி சொத்து முடக்கம்
-
தண்ணீர்குளம் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
-
தமிழக அரசியலில் அனலை கிளப்பிய தர்மேந்திர பிரதான் 28ல் சென்னை வருகிறார்
-
'தினமலர்' செய்தி எதிரொலி : நூலகத்தை சுற்றி வளர்ந்திருந்த செடிகள் அகற்ற