இன்று முதல் 4 நாட்களுக்கு வெப்பம்; 3 டிகிரி அதிகரிக்கும்

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு, இயல்பைவிட 3 டிகிரி செல்ஷியஸ், கூடுதலாக வெப்பம் பதிவாகும் என, வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.

அந்த மையத்தின் அறிக்கை:



தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் இயல்பைவிட, 3 டிகிரி செல்ஷியஸ், கூடுதலாக வெப்பம் பதிவாகி உள்ளது.இது மேலும் சில நாட்கள் தொடரவாய்ப்புள்ளது.


இதன்படி, இன்று முதல் பிப். 22 வரை,தமிழகத்தில் ஒருசில இடங்களில் பகல் நேர அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பைவிட,3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாகபதிவாக கூடும். பிற இடங்களில் வறண்டவானிலை காணப்படும். சில இடங்களில் காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டமாகவும், காலையில் லேசான பனிமூட்டமாகவும் காணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement