அரசு மகளிர் கல்லுாரியில்இன்றும் மருத்துவ முகாம்


அரசு மகளிர் கல்லுாரியில்இன்றும் மருத்துவ முகாம்


சேலம்:சேலம், கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கலைக்கல்லுாரியில், 'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தில், மாணவியருக்கு பரிசோதனை முகாம் நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் ஜெயஸ்ரீ தொடங்கி வைத்தார். ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, உயரம், எடை, ரத்தசோகை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு, பாதிப்பு அறிகுறி உள்ள மாணவியருக்கு, மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதில், 3,000க்கும் மேற்பட்ட மாணவியருக்கு உடல் பரிசோதனை செய்யப்பட உள்ளதால், இன்றும் முகாம் நடக்கிறது.

Advertisement