ஓடும் பஸ்சில் திருடிய4 பெண்கள் கைது
ஓடும் பஸ்சில் திருடிய4 பெண்கள் கைது
சேலம்:சேலம் கருப்பூர், குஞ்சம்மாள் தெருவை சேர்ந்தவர் மங்கையர்கரசி, 47. நேற்று முன்தினம் மதியம், 2:30 மணிக்கு, பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து கருப்பூருக்கு, டவுன் பஸ்சில் சென்றுகொண்டிருந்தார். கரும்பாலை அருகே சென்றபோது, அவரை, 4 பெண்கள் இறங்கவிடாமல் சுற்றி வளைத்து நெருக்கினர். தொடர்ந்து அவரிடமிருந்து மொபைல் போன், 500 ரூபாயை திருடினர். இதை கவனித்த மங்கையர்கரசி கூச்சலிட்டார். உடனே பயணியர், 4 பெண்களையும் சுற்றிவளைத்து, கருப்பூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் திருச்செந்துாரை சேர்ந்த தேவி, 45, துாத்துக்குடி நாகேஸ்வரி, 36, ராஜேஸ்வரி, 29, கலை, 39, என்பதும், பஸ்சில் கூட்டத்தை ஏற்படுத்தி, பணம், நகையை பறித்து வந்ததும் தெரிந்தது. இதனால், 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'அழகாக இருக்கிறீர்கள்' என்று மெசேஜ் அனுப்பினாலே குற்றம்: மும்பை நீதிமன்றம்
-
இந்தியா-பாக்., மோதல்... 'வின்னர்' யார்: கங்குலி, அப்ரிதி கணிப்பு எப்படி
-
பெங்களூருவை வீழ்த்தியது மும்பை: கடைசி ஓவரில் 'திரில்' வெற்றி
-
சரத்கமல், போபண்ணா நீக்கம் * மத்திய விளையாட்டு அமைச்சகம் 'ஷாக்'
-
இந்தியா உலக சாதனை * ஆசிய கோப்பை வில்வித்தையில்...
-
கோலிக்கு கும்ளே 'அட்வைஸ்'
Advertisement
Advertisement