தென்னையில் ரூகோஸ் ஈ கட்டுப்படுத்தரசாயன பூச்சிக்கொல்லி பயன்படுத்தாதீர்!


தென்னையில் ரூகோஸ் ஈ கட்டுப்படுத்தரசாயன பூச்சிக்கொல்லி பயன்படுத்தாதீர்!


சேலம்:தென்னையில் பரவி வரும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈயை கட்டுப்படுத்த, ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில், 32,000 ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது நிலவும் அதிக வெப்பநிலையால், தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் காணப்படுகிறது. தொடர்ந்து வறண்ட நிலை நீடித்தால் பூச்சி தாக்குதல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இப்பூச்சிகள் தென்னை மட்டுமின்றி வாழை, பாக்கு, சப்போட்டா ஆகிய பயிர்களையும் தாக்குகின்றன. அதனால் ஏக்கருக்கு, 2 வீதம், விளக்கு பொறிகள் அமைத்து, இரவு, 7:00 முதல், 11:00 மணி வரை இயக்கி அழிக்கலாம். ஓலைகளின் அடிப்பகுதியில் வேகமாக தண்ணீரை பீய்ச்சி அடிப்பதன் மூலமும், ஈக்களின் எண்ணிக்கை பெருகுவதை தவிர்க்கலாம். 'என்கார்சியா' ஒட்டுண்ணி குளவி, கண்ணாடி இறக்கை பூச்சி இறை விழுங்கி முட்டைகள், மைதா மாவு பசை கரைசல் ஆகியவை மூலமும் அழிக்கலாம். ரசாயன பூச்சிக்கொல்லிகள், இயற்கை எதிர் உயிர் பூச்சிகளை அழித்து விடும் என்பதால் அறவே பயன்படுத்தக்கூடாது. விபரம் பெற, அருகே உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம் என, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

Advertisement