உடல் உறுப்பு தானம் கவுரவிப்பு திட்டத்துக்கு பாராட்டு

புதுச்சேரி: உடல் உறுப்பு தானம் செய்பவர்கள் கவுரவிக்கப்படுவர் என, அறிவித்த புதுச்சேரி அரசுக்கு இளைஞர் அமைதி மையம் பாராட்டு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மையத்தின் நிறுவனர் அரிமதி இளம்பரிதி வௌியிட்டுள்ள அறிக்கை;

உடல் உறுப்பு தானம் செய்பவர்களை கவுரவிக்க புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதனால், மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய வேண்டும் என்ற சமூக அக்கறையும், சேவை எண்ணமும் பொதுமக்களிடையே உருவாகும்.

முக்கிய உடல் உறுப்புகள் கிடைக்காததால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், குழந்தைகள் தினம் இறந்து வருகின்றனர். உடல் உறுப்புகளுக்காக பதிவுச் செய்து விட்டு வருடக் கணக்கில் ஏழை மக்கள் காத்திருக்கின்றனர். இறந்தவரின் ஒரு தானத்திலிருந்து எட்டு நபர்களுக்கு மறு வாழ்வு கொடுக்க முடியும். புதுச்சேரி அரசின் நடவடிக்கையால் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்ற பல பேர் பயன்பெறுவர். இத்திட்டத்தை அமல்படுத்திய புதுச்சேரி அரசுக்கு நன்றி.

Advertisement