தேவர்குளத்தில் சேதமடைந்த சிறுவர் பூங்கா

சிவகாசி: சிவகாசி அருகே தேவர்குளம் ஊராட்சியில் சிறுவர் பூங்காவில் புதர்கள் சூழ்ந்ததோடு விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ளது.

இதனை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சிறுவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சிவகாசி அருகே தேவர்குளத்தில் ஊராட்சி அலுவலகம் அருகே ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அம்மா பூங்கா என்ற பெயரில் சிறுவர் பூங்கா துவக்கப்பட்டது.

இதில் சிறுவர்கள் விளையாடும் வகையில் ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

சில ஆண்டுகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த இந்தப் பூங்கா தற்போது சிதைந்து விட்டது. இங்குள்ள ஊஞ்சல், சறுக்கு போன்ற விளையாட்டு உபகரணங்கள் சேதம் அடைந்து விட்டது. தவிர பூங்கா முழுவதுமே புதர்கள் சூழ்ந்துள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி விடுகின்றது.

இதனால் சிறுவர்கள் பொழுதுபோக்க வழியில்லாமல் சிரமப்படுகின்றனர். ஒரு சில சிறுவர்கள் சேதமடைந்த விளையாட்டு உபகரணங்களில் விளையாடி காயமடைகின்றனர்.

எனவே உடனடியாக அனைத்து விளையாட்டு உபகரணங்களையும் சரி செய்து பூங்காவினை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

Advertisement