குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுது சீரமைக்க கல்லுாரி மாணவர்கள் கோரிக்கை

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், இயந்திரம் பழுதானதால், குடிநீர் இன்றி மாணவர்கள் தவிக்கின்றனர்.
ரிஷிவந்தியம் அடுத்த பாவந்துாரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த, 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
இங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இயந்திரம் பழுது காரணமாக சில மாதங்களாக குடிநீர் வரவில்லை.
இதனால், குடிநீர் கிடைக்காமல் மாணவர்கள் தவிக்கின்றனர்.
குடிநீருக்காக நாள்தோறும் அரை கி.மீ., துாரம் நடந்து சென்று, கடைகளில் விற்கப்படும் தண்ணீர் கேன்களை வாங்கி வருகின்றனர்.
எனவே, பழுதடைந்த இயந்திரத்தை சரிசெய்து, தடையின்றி குடிநீர் கிடைக்க, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
210 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டதற்கு திருவாலங்காடில் 1,000 மரக்கன்றுகள் நட திட்டம்
-
சினிமா இயக்குநர் ஷங்கரின் ரூ.10 கோடி சொத்து முடக்கம்
-
தண்ணீர்குளம் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
-
தமிழக அரசியலில் அனலை கிளப்பிய தர்மேந்திர பிரதான் 28ல் சென்னை வருகிறார்
-
'தினமலர்' செய்தி எதிரொலி : நூலகத்தை சுற்றி வளர்ந்திருந்த செடிகள் அகற்ற
-
'ரீல்ஸ்' எடுக்க ஆற்றில் குதித்த பெண் டாக்டர் சடலமாக மீட்பு
Advertisement
Advertisement