ராமேஸ்வரத்தில் சுவாமி அம்மன் வீதி உலா

ராமேஸ்வரம்,:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து சுவாமி, அம்மன் வீதி உலா புறப்பாடாகி கெந்தமாதன பர்வதம் மண்டகப்படியில் எழுந்தருளினர்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி சிவராத்திரி விழாவின் 3ம் நாளான நேற்று காலை 6:30 மணிக்கு சுவாமி வெள்ளி பூத வாகனத்திலும், பர்வதவர்த்தினி அம்மன் வெள்ளி கிளி வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா சென்றனர். கெந்தமாதன பர்வதம் மண்டகப்படியில் எழுந்தருளினர்.

அப்போது வீதியெங்கும் கூடியிருந்த பக்தர்கள் பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். பின் மண்டகப்படியில் சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்ததும், அங்கிருந்து புறப்பாடாகி இரவு 10:00 மணிக்கு மேல் கோயிலுக்கு திரும்பினர். இதனால் நேற்று காலை 7:00 மணி முதல் இரவு 10 மணி வரை கோயில் நடை அடைக்கப்பட்டது.--

Advertisement