மீஞ்சூரில் ரயில்வே சுரங்கபாதை அமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
மீஞ்சூர்:மீஞ்சூர் ரயில் நிலையத்தின் அருகே. காட்டூர் சாலையில் ரயில்வே கேட் அமைந்து உள்ளது. இங்கு வாகன போக்குவரத்து வசதிக்காக ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுகிறது.
ரயில்வே மேம்பால பணிகள் மந்த கதியில் நடைபெறுவதால், வாகன ஓட்டிகள் ரயில்வே கேட் மூடியிருக்கும் நேரங்களில் நீண்ட காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இதே பகுதியில், இருசக்கர வாகனங்கள் செல்வதற்காக சுரங்கப்பாதை அமைப்பதற்கான கட்டுமானங்கள் தயாரிக்கப்பட்டு, அதுவும் பயனுக்கு வராமல் இருக்கிறது.
இந்நிலையில் நேற்று மாலை, மீஞ்சூர் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்கவும், கிடப்பில் போடப்பட்ட சுரங்கப்பாதை பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரி காங்., - வி.சி., - இ.கம்யூ., - மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை சார்ந்தவர்கள் மீஞ்சூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, திட்டப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளாவிட்டால், அடுத்தகட்ட போராட்டங்களிலும் ஈடுபடுவோம் என, தெரிவித்தனர்.
மேலும்
-
திருவள்ளூர் அரசு அலுவலகங்களுக்கு கொக்கி போட்டு மின்சாரம் திருட்டு வேலியே பயிரை மேய்கிறது
-
தி.மு.க.,வின் ஹிந்தி எதிர்ப்பு லட்சணம்!
-
கல்லுாரி மாணவியரை தாக்கியவர் கைது
-
மனித கடலை உருவாக்கிய அமைச்சர்கள் முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
-
அவதுாறு வழக்குகளை முடிவுக்கு கொண்டு வருகிறது கல்வித்துறை; மாநில நிர்வாக தீர்ப்பாயம் ஏற்படுத்த வலியுறுத்தல்
-
பள்ளி சிறுமிகளிடம் சில்மிஷம் : போக்சோவில் இருவர் கைது