டெண்டர் பங்கிடுவதில் மோதல் அலுவலக பொருட்கள் உடைப்பு

நாகர்கோவில்"டெண்டர்களை பங்கிடுவது தொடர்பாக இடைக்கோடு பேரூராட்சியில் கவுன்சிலர்,- கான்ட்ராக்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் அலுவலக பொருட்கள் நொறுக்கப்பட்டன. இது தொடர்பாக 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே இடைக்கோடு பேரூராட்சியில் 47 கான்ட்ராக்டர்கள் பதிவு செய்துள்ளனர். அனைத்து கான்ட்ராக்டர்களுக்கும் வேலை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க தலைவர் உமாதேவி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இரண்டு நாட்களுக்கு முன் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டு பெட்டிகள் வைக்கப்பட்டன. ஏற்கனவே ஒப்பந்தங்களை எடுத்தவர்கள் மனைவி பெயரில் மீண்டும் பணி கேட்டு வந்தனர். இதனால் இதுவரை வேலை கிடைக்காத கான்ட்ராக்டர்களுக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கவுன்சிலர்களும் இரு பிரிவாகப் பிரிந்து பரஸ்பரம் வாக்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டது. அலுவல டேபிள் உடைக்கப்பட்டு, பைல்கள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் டெண்டர் ஒத்திவைக்கப்பட்டது. பேரூராட்சி தலைவர் உமாதேவி அருமனை போலீசில் புகார் செய்தார்.

அலுவலக பொருட்களை சேதப்படுத்தி, கோப்புகளை நாசம் செய்ததாக கான்ட்ராக்டர்கள் வினு , கிறிஸ்துராஜ், விஜயகுமார், கவுன்சிலர்கள் ராஜா ஸ்டாலின், சுரேஷ், சாஜிகுமார், வினுவின் மனைவி வசந்தகுமாரி, கிறிஸ்துராஜின் மனைவி சைலஜா ஆகிய எட்டு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement